அஜீரணத்தை 5 நிமிடத்தில் போக்கும் வீட்டு மருத்துவம்!

அதிக அளவில் சாப்பிடும்போது ஏற்படும் அஜீரண கோளாறுகளை வீட்டு முறை வைத்தியத்திலேயே சரி செய்யலாம். அஜீரணத்தை தீர்க்கும் சில வீட்டு மருத்துவ குறிப்புகள்.

Various Source

உணவுடன் இஞ்சி சேர்த்து கொள்வது அல்லது சாப்பிட்ட பின் இஞ்சி சாறு பருகுவது அஜீரணத்தை குறைக்கும்.

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் குடலின் செரிமான செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது.

பெரிய நெல்லிக்காயை கடித்து மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அஜீரணம் குறையும்.

அஜீரண பிரச்சினை குணமாக இலவங்கபட்டையை தேநீர் அல்லது வெந்நீரில் போட்டு குடிக்கலாம்.

Various Source

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால் அஜீரண பிரச்சினைகள் குறையும்

பெருஞ்சீரகத்தை சுடு தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரண பிரச்சினைகள் மறையும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக அறிவுரைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.