வெஜிடபில் கோதுமை ரவை உப்புமா

Mahalakshmi| Last Modified புதன், 14 ஜனவரி 2015 (12:40 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை-1 கப்,
வெங்காயம் - 2,
இஞ்சி- சிறிய துண்டு,
மஞ்சள் தூள்-½ தேக்கரண்டி,
கொத்தமல்லி இலை சிறிதளவு,
எலுமிச்சை பழச்சாறு-2 தேக்கரண்டி,
உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட்-1 கப்,
பச்சை பட்டாணி-¼ கப்,
பச்சை மிளகாய்-3,
தண்ணீர்-3 கப்,
உப்பு-தேவைக்கு ஏற்ப.
கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவை சிறிதளவு.

செய்முறை:

முதலில் கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். சூடான வாணலியில் முதலில் கடுகை போட வேண்டும். பின் கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். வறுத்த கோதுமை ரவையை கொஞ்சம், கொஞ்சமாக தூவி கிளறி விடவும்.
கோதுமை ரவை வெந்து கெட்டியானதும், இறக்கி விட வேண்டும். கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலையை உப்புமாவில் சேர்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :