திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
வெங்காயம் - 2
சீரகம் - கால் டீஸ்பூன்
கோதுமை மாவு - 2 கப்
மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
கேரட் - 1
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 2

செய்முறை: 
 
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். கோதுமை மாவில் சிறிது  உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
 
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும். இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா  உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
 
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு  எடுக்க வேண்டும்.
 
இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா  வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம். சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.