அவல் லட்டு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
அவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - கால் கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி பருப்பு - 1௦
செய்முறை:
 
சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அவலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மொருமொரு என்று வரும் வரை அவலை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனை நன்கு மிகிஸ்சியில் போட்டு  பொடி செய்து கொள்ளவும்.
இதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும். நெய்யை உருக்கி அதில் சர்க்கரை மற்றும் இந்த பொடி செய்த கலவைகளை சேர்த்து  ஒரு கரண்டியால் நன்கு கிளறவும். நன்கு கிளறிய வுடன், சிறிது நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டை பிடிக்கவும். சுவையான  அவல் லட்டு தயார்.


இதில் மேலும் படிக்கவும் :