வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவையான கோயில் புளியோதரை செய்ய வேண்டுமா....?

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 5 கப்
நல்லெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 200 கிராம்
 
புளிக்காய்ச்சல் தயாரிக்க:
 
புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
கடுகு - 10 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 10 கிராம்.
செய்முறை:
 
புளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,  வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
 
பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும் 2 நிமிடம் கொதித்தவுடன் உப்பு  மஞ்சள்  பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 
புளிநீர் பாதியாக வறும்வரைக் கொதிக்கவிட்டு இறக்கி எடுத்துவைக்கவும். பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு ஆறியதும் புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பிறகு தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணெய் கலந்து அதையும்  சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும். சுவையான, வாசனையான கோயில் புளியோதரை தயார்.