வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

தேவையான பொருட்கள்: 
 
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
மிளகாய் பொடி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஸ்பூன்
ப.கொத்தமல்லி - 1/2 கட்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 4
பட்டை - 1 துண்டு
சென்னா - 1/2 கப் (ஊற வைத்தது)
தக்காளி - 2 நீளமாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
புதினா - 1/2 கட்டு
தயிர் - 1/2 கப்
எண்ணை - தேவையான அளவு

 
 
 
செய்முறை:
 
* சென்னாவுடன் சிறிது உப்பு சேர்த்து 4 விசில் கொடுத்து வேக விடவும். பாசுமதி அரிசியை களைந்து 1/2 கப் தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்.
 
* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை காய்ந்தவுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளிக்கவும். பிறகு வெங்காயம், போட்டு வதங்கியதும், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 
* பின்னர் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) உப்பு சேர்த்து குக்கரை மூடவும். 1 விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். தயிர் பச்சிடியுடன் நன்றாக இருக்கும்.