உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள...

Webdunia|
குழந்தைகளே நீங்கள் அறிவாளிகள்தான். உங்களது பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளத்தான் இந்த துணுக்குகள்...

இந்தியாவின் முதல் தபால் தலையை வடிவமைத்தவர் துணை சர்வேயர் ஜெனரலான காப்டன் எச்.எல். துல்லியார்.

அமெரிக்காவில் சராசரியாக ஆண்டுக்கு 625 பேர் மின்னலால் தாக்கப்படுகிறார்கள்.

சூரிய ஒளியானது தெளிந்த கடல் நீரில் 240 அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும்.
சோழப் பேரரசுக்கு வித்திட்டவன் விஜயலாயன்.

உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதியாகும். இதன் நீளம் 6,690 கி.மீ. ஆகும்.

பால் பாயிண்ட் பேனாவைக் கண்டு பிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜெ. லவுட்.

உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி என்ன தெரியுமா-நீங்கள் நினைத்தது தவறு ஆங்கிலம் அல்ல..... சீன மொழி தான்.

இந்தியாவின் மொத்த மழைப் பொழிவு ஆண்டுக்கு 16,72,600 கன மீட்டர்களாகும்.


இதில் மேலும் படிக்கவும் :