ஆற்றில் மூழ்கவிருந்த குழந்தையை காப்பாற்றிய நாய்! பாசப்பிணைப்பின் வைரல் வீடியோ!

Last Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (12:50 IST)
செல்லப்பிராணி நாய் ஒன்று தனது முதலாளியின் குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய வீடியோ பார்வையாளர்களை நெகிய செய்துள்ளது. 
 
தன் முதலாளியின் குழந்தை ஆற்றங்கரையோரம்  பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக பந்து ஆற்றில் விழுந்துவிட, நதிக்கரையில் நின்றுகொண்டு அந்த பந்தை எடுக்க முயற்சித்த சிறுமியை பார்த்த நாய், எங்கே குழந்தை ஆற்றில் விழுத்திடுவாளோ என்று எண்ணி ஓடி சென்று குழந்தையை தன் வாயால் கவ்வி இழுத்து கரையில் பத்திரமாக அமரவைத்துவிட்டு பின்னர் ஆற்றில் இறங்கி விழுந்த அந்த பந்தையும் எடுத்து வந்து அந்த நாய் குழந்தையிடம் கொடுத்தது.
 
நாயின் இந்த செயல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :