திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (15:28 IST)

5 ரூபாய் செக்கை மாற்ற 500 ரூபாய் செலவழிக்க வேண்டுமா? விவசாயிகள் வேதனை

மழை பொய்த்து பயிர் வாடினாலோ அல்லது வெள்ளத்தில் பயிர் மூழ்கிவிட்டாலோ விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகையை தமிழக அரசு வழங்குவது வழக்கம். இந்த தொகை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு இந்த பயிர்க்காப்பீட்டு தொகை இருக்கும்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, மத்திய கூட்டுறவு வங்கி அதே மாவட்டத்தில் உள்ள போடுவார்பட்டி என்ற கிராம விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டு இழப்பீடாக, ரூ.5, ரூ.10 என காசோலை வழங்கியதாக தெரிகிறது. ஒருசிலருக்கு ரூ.2, ரூ.3க்கும் காசோலைகள் வந்துள்ளதாம்

வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்த ஐந்து ரூபாய் செக்கை மாற்ற ரூ.500 செலவு செய்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய நிலை இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது வங்கி அதிகாரிகளின் தவறா? அல்லது உண்மையிலேயே பயிர்க்காப்பீடு தொகை இவ்வளவுதானா? என்று புரியாமல் அந்த பகுதி
விவசாயிகள் உள்ளனர்.