முதல் அட்டையைத் தேர்வு செய்யவும்.

  • image1

    மேஜர் அர்கானாவின் முட்டாள் அட்டையை நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். உங்களுடைய எதிர்காலம் குறித்த கேள்வி இது என்பது தெரிகிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பதால் வாழ்க்கையில் நீங்கள் சற்று கஷ்டப்பட வேண்டும் என்பதை முட்டாள் அட்டை நிரூபிக்கிறது. ஆயினும் இறுதியில் உங்களது நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.

    மூன்றாவது இடத்தில் முட்டாள் அட்டை இருப்பது உங்களுடைய எதிர்காலம் சாதகமான நேரத்தையும் உங்களுடைய கனவுகளின் சக்தியையும் காட்டுகிறது.

  • image1

    நீங்கள் அறிவார்ந்தவர். உங்களுடைய அறிவு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    உங்களுடைய பேச்சு திறனை உங்கள் பணியில் நீங்கள் பயன்படுத்தினால் எல்லாம் சூழ்நிலையும் சாதகமாக அமையும்.

    டேரட்டின் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் எல்லா முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெற்றி பெறுவீர்கள்

  • image1

    ஒவ்வொரு சூழ்நிலையையும் புரிந்து கொள்ளக்கூடிய திறன் உங்களுக்கு உள்ளது. அதனை சாதகமாக மாற்றிக் கொள்ள முயற்சிப்பீர்கள்.

    நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், ஆழமாக சிந்திக்க வேண்டும், பொறுமை, வெற்றி பெற உதவும்.

    முடிவுகளும் மாற்றங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

  • image1

    எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உங்களின் மனப்பான்மையை இது காட்டுகிறது. அது உங்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிறப்பையும் சேர்க்கும்.

    எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதற்காக கடுமையாக முயற்சிப்பீர்கள். நீங்கள் வெற்றிப் பெற யாராவது உதவுவார்கள்.

    சரியான நேரத்தில் நீங்கள் வெற்றிப் பெறுவது நிச்சயம் என்பது தெரிகிறது. உங்களுடைய வாழ்க்கை நிலையாக இருப்பதை உணர்வீர்கள்.

  • image1

    மகாராஜா முதலிடத்தில் உள்ளது உங்களுக்கு வரப்போகும் வெற்றியையும், சாதகமான சூழ்நிலையையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் மகாராஜா வந்திருப்பது உங்களை நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ள நீங்கள் கடிமையாக உழைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. உங்களுடைய பொறுப்புக்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

    மூன்றாவது இடத்தில் மகாராஜா வந்திருப்பது வெற்றிக்கான வழியைக் காட்டுகிறது. ஆனால் அதற்காக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

  • image1

    உயர்ந்த அர்ச்சகர் முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய இலக்குகளை எட்ட நீங்கள் மிக உண்மையாக முயற்சிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

    அனுபவமிக்கவர்களின் ஆலோசனையை கேட்டுக் கொண்டு அதன்பிறகு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த அட்டை தெரிவிக்கிறது.

    சரியான திசையில் முயற்சித்தீர்களானால் சாதகமான முடிவுகளை எட்டலாம். சரியான நேரத்தில் சரியான ஆலோசனை உங்களுக்கு மிகவும் உதவும்.

  • image1

    முதலிடத்தில் உங்களுக்கு காதலர்கள் அட்டை வந்திருப்பது உங்களுக்கு முடிவெடுப்பதில் உள்ள குழப்பமான நிலையையும், உங்களின் இதயமே உங்கள் மூளையை இயக்குகிறது என்பதையும் உணர்த்துகிறது.

    உங்களுடைய இலக்கில் உங்களது மனதால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதையே இந்த அட்டை உணர்த்துகிறது.

    உணர்ச்சிக்கரமான சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது உங்களது இதயம் உங்களது மூளை காட்டும் வழிகளை அனுசரிக்காமல் செயல்படும். இதனால் மேலும் குழப்பங்கள் அதிகரிக்கும்.

  • image1

    உங்களுடைய முயற்சியில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். நீங்கள் பணியாற்றிடும் துறையில் வெற்றிப் பெற திட்டமிட்டுள்ளீர்கள்.

    உண்மையுடன் நீங்கள் தொடர்ந்து முயற்சித்தால் உங்களுடைய முயற்சிகள் நிச்சயம் விரைவில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

    உங்களுடைய இலக்கை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே எட்டுவீர்கள், எனவே வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்துக்கு தயாராகுங்கள்.

  • image1

    பலத்தை குறிக்கும் அட்டையை முதலிடத்தில் பெற்றுள்ளீர்கள். இது நீங்கள் சக்தி மிக்கவர் என்பதையும், உங்களை சார்ந்துள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள் என்பதை தெரிவிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் பலம் என்பது உங்களுடைய இலக்கை எட்டுவதற்கு உங்களுக்கு துணிச்சலும் ஒழுக்கமும் வேண்டும் என்பதை காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய இலக்கை அடைவதற்கு உங்களுக்கு துணிச்சலும் சுயக்கட்டுப்பாடும் உதவும் என்பதையும், அதற்கு சிறிது காலம் ஆகும் என்பதையும் தெரிவிக்கிறது.

  • image1

    ஹெர்மிட் முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய புத்திச்சாலித்தனத்தையும் உயர்ந்த முதிர்ச்சி அளவையும் காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் ஹெர்மிட் வந்திருப்பது நீங்கள் வெற்றிப் பெற பொறுமையும் அதிக முயற்சியும் தேவை என்பதை காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் ஹெர்மிட் வந்திருப்பது உங்களுடைய இலக்கை எட்டும் முயற்சியில் எச்சரிக்கையும் பொறுமையும் தேவை என்பதை காட்டுகிறது.

  • image1

    அதிர்ஷ்டச் சக்கரம் முதலிடத்திலேயே வந்திருப்பது முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அது மட்டுமின்றி உங்களுடைய யதார்த்த அணுகுமுறையையும் காட்டுகிறது.

    இந்த அட்டை வந்திருப்பது சாதகமான முடிவுகள் வருகிறது பொறுமை அவசியம் என்பதை தெரிவிக்கிறது.

    அதிர்ஷ்ட சக்கரம் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது அதிர்ஷ்டத்தையும், அதற்கான சூழல் எதிர்காலத்தில் ஏற்பட போவதையும் காட்டுகிறது. ஆனால் அதற்கு சில காலம் ஆகலாம்.

  • image1

    நீங்கள் எதை சாதிக்க நினைக்கிறீர்களோ அது உங்களுக்கு ஏற்றது தான். ஆனால் அதனை சாதிக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், பிரச்சனையின் ஒவ்வொரு விவரத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    பிரச்சினைக்கு தீர்வு காண உங்களுடைய முயற்சியில் ஒரு சரிசமமான தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

  • image1

    தூக்கில் தொங்கும் மனிதன் அட்டை நம்பிக்கையும் பற்றுறுதியையும் குறிக்கிறது. ஒன்றை பெறுவதற்கு ஒன்றை நீங்கள் இழக்க வேண்டும்.

    இரண்டாவது இடத்தில் தூக்கில் தொங்கும் மனிதன் வந்திருப்பது, உங்களுடைய இலக்கை எட்டுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் தூக்கில் தொங்கும் மனிதன் வந்திருப்பது வெற்றியின் அறிகுறியாகும். ஆனால், நல்ல முடிவை எட்டுவதற்கு நீங்கள் அதிகமான பொறுமை காக்க வேண்டும்.

  • image1

    மேஜர் அர்கானா மரணம் அடைந்து விட்ட அட்டையை நீங்கள் முதலிடத்தில் பெற்றிருப்பது மாற்றங்களையும் புதிய துவக்கத்தையும் குறிக்கிறது.

    உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை இந்த அட்டை குறிக்கிறது. புதிய மாற்றங்களையும் புதிய துவக்கத்தையும் இது குறிக்கிறது.

    மரணம் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வழியையும் நீங்கள் காண்பீர்கள் என்பதை குறிக்கிறது. அது வெற்றியை நோக்கிய புதிய திசையில் உங்களை அழைத்துச் செல்லும்.

  • image1

    தன்னடக்க அட்டை முதலிடத்திலேயே வந்திருப்பது சக்தியையும் சந்தோஷத்தையும் குறிக்கிறது. சூழ்நிலைக்கு தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பான்மையையும் தன்னம்பிக்கையையும் குறிக்கிறது.

    தன்னடக்க அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையும் மற்றவருடைய ஆதரவு தேவை என்பதையும் குறிக்கிறது.

    வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிட்டும். ஆனால் சிறிது காலம் ஆகும். உங்களுடைய சக தோழர்களுடன் இணைந்து சரியான திசையில் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

  • image1

    முதலிடத்திலேயே பேய் அட்டை வந்திருப்பது உங்களுடைய சுயநலத்தன்மைக் கொண்ட குணத்தைக் காட்டுகிறது. எல்லாவிதமான தவறான சிந்தனைகளில் இருந்தும் உங்களை நீங்கள் மீட்டுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    பேய் அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது தவறான இச்சைகளையும் எதிர்மறையான முடிவுகளையும் குறிக்கிறது.

    உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தவறான திசையில் செல்வதையே காட்டுகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் குறுகிய எதிர்காலத்தில் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

  • image1

    உங்களுடைய எதிர்காலம் குறித்து உங்களுடைய மனதில் உள்ள கேள்விகளையும் குழப்பங்களையும் இந்த அட்டை உணர்த்துகிறது.

    கோபுர அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது, உடனடி அனுபவத்தையும் உங்கள் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது.

    எல்லாவிதமான பதற்றங்களிலிருந்து விரைவில் நீங்கள் விடுபடுவீர்கள் என்பதை காட்டும் ஒரு குறியீடு இது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உறுதியான நிலையை உணர்வீர்கள்.

  • image1

    முதலிடத்திலேயே நட்சத்திரம் வந்திருப்பது நம்பிக்கையான அணுகுமுறையை உணர்த்துகிறது. நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினால் அது உங்களுடைய எதிர்காலத்திற்கு உதவும்.

    இரண்டாவது இடத்தில் நட்சத்திரம் வந்திருப்பது உங்கள் வாழ்க்கையில் நிலவி வந்த தேக்க நிலை முடிந்து விட்டதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் நட்சத்திரம் வந்திருப்பது புதிய உறவுகளை பெற்று தரக்கூடிய புதிய வாய்ப்புகளையும் புதிய சூழல்களையும் உருவாக்குவதையும், எதிர்காலத்தில் வெற்றியையும் குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் நிலவு வந்திருப்பது உங்களுடைய கனவுகளையும் சிந்திக்கும் திறனையும் மட்டுமின்றி நம்பிக்கையான அணுகுமுறையையும் குறிக்கிறது.

    இனி உங்களது எதிர்காலம் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்ததாகவும் உங்கள் முயற்சிகள் சரியான திசையில் செல்வதாகவும் அமையும்.

    மூன்றாவது இடத்தில் நிலவு வந்திருப்பது எல்லா சூழ்நிலைகளையும் நீங்கள் சரியான அணுகுமுறையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், ஒரே திசையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் சூரியன் வந்திருப்பது உங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து நீங்கள் உறுதியாக இருப்பதைப் பற்றியும் தன்னம்பிக்கையான மனிதன் என்பதையும் புலப்படுத்துகிறது.

    இரண்டாவது இடத்தில் சூரியன் வந்திருப்பது நல்ல நிலையை எட்டுவதற்கு நீங்கள் சீரான, தீவிர முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் சூரியன் வந்திருப்பது எதிர்காலத்தில் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் குறிக்கிறது.

  • image1

    தீர்ப்பு அட்டை முதலிடத்தில் வந்திருப்பது உங்களது சரியான மனப்பாங்கையும், உயர்ந்த திறமையும் காட்டுகிறது.

    தீர்ப்பு அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது நீங்கள் மனம் ஒருமித்து சரியான முயற்சியை எடுக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் தீர்ப்பு அட்டை வந்திருப்பது உங்களுடைய நிலையில் மாற்றத்தையும் வெற்றியையும் உங்களது சாதனைக் குறித்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் காட்டுகிறது.

  • image1

    உலக அட்டையை முதலிடத்தில் பெற்றுள்ளீர்கள். அது நீங்கள் தற்போது மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் உலகம் வந்திருப்பது உங்கள் சீரிய முயற்சிகள் சரியான திசையில் இருந்தால் அது மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் என்பதை குறிக்கிறது.

    காலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் உங்களுடைய தோழர்களை விட்டுவிடாதீர்கள். அது மட்டுமின்றி அவர்களோடு இணைந்து வெற்றிப் பெற கூட்டு முயற்சி மேற்கொள்ளுங்கள்.

  • image1

    காற்று அட்டை உங்களுடைய முதலிடத்தில் வந்திருப்பது, புதிய உறவுகளை நீங்கள் உருவாக்குவீர்கள் என்றும், அது உங்களுக்கு எதிர்காலத்தில் சாதகமாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது.

    புதிய சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றியுள்ளதையும், அதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படும் என்பதையும் காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்ப உங்களது கனவுகளை நிறைவேற்ற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

  • image1

    உங்களுடைய இலக்குகளை எட்டுவதற்கு நீங்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை இந்த அட்டை காட்டுகிறது.

    உங்களுடைய இலக்குகளை எட்டுவதற்கு சீரான முயற்சியும், கடும் உழைப்பும் தேவை.

    இறுதியில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆனால் இதனை இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று நினைப்பீர்கள்.

  • image1

    இந்த அட்டை முதலிடத்தில் வந்திருப்பது, புதிய உறவையோ அல்லது உங்கள் திருமணத்தையோ குறிக்கிறது.

    உங்களுடைய இயற்கை சுபாவத்தையும், நண்பர்கள், வாழ்க்கைத் துணைவி ஆகியோரிடம் நீங்கள் உணர்ச்சிமயமாக உறவுக் கொண்டுள்ளதையும் காட்டுகிறது.

    கடைசியில் எல்லாம் நல்லதாகவே முடியும். உங்களது உறவுகளை காப்பதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.

  • image1

    இந்த அட்டை முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய வாழ்க்கையில் திருப்திகரமான நிலையை நீங்கள் எட்டுவீர்கள் என்பதை காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது, உங்களது இலக்கை எட்டுவதற்கு கடுமையாக பாடுபட்டதற்கு பிறகு ஒய்வு பெற விரும்பும் உங்கள் சிந்தனையைக் காட்டுகிறது.

    இந்த அட்டை மூன்றாவது இடத்தில் வந்திருப்பது விரைவில் நீங்கள் மன அமைதியையும் இலக்கை அடைந்த திருப்தியையும் பெறுவீர்கள் என்பதைக் காட்டுகிறது.

  • image1

    இந்த அட்டை முதலிடத்தில் வந்திருப்பது வாழ்க்கையில் நீங்கள் மரியாதைக்குரிய இடத்தை எட்ட கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

    இரண்டாவது இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய பணியில் நீங்கள் கடுமையான போட்டியை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது வெற்றிப் பாதையை நீங்கள் எட்டுவதற்குள் கழுத்தை அறுக்கும் போட்டியை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

  • image1

    சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாகும். உங்களுடைய சாதனைகளை நினைத்து நீங்கள் திருப்தியடைவீர்கள்.

    திட்டமிட்ட முயற்சியினாலும் நண்பர்களின் உதவியினாலும் உங்களுடைய இலக்கை எட்டுவதில் வெற்றிப் பெறுவீர்கள்.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது வெற்றிக்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களது சாதனைகளையும், ஒளி மயமான எதிர்காலத்தையும் குறிக்கிறது.

    உங்களுடைய எதிரிகளை நினைக்கும் போது சில நேரங்களில் உங்களது தன்னம்பிக்கை சற்று குறைவதை உணர்வீர்கள்.

    நிச்சயமான வெற்றியை எட்ட நன்கு முடிவு செய்யப்பட்ட சீரான முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.

  • image1

    முதலிடத்தில் இந்த அட்டை வந்திருப்பது தீவிரமான செயல்பாட்டையும் வேகமான உடல்நிலை தேர்தலையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது இலக்கை எட்டுவதற்கு குழுவோடு இணைந்து சீரான முயற்சி தேவைப்படுவதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது சரியான திசையில் சீரிய முயற்சி எடுத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் இந்த அட்டை வந்திருப்பது முன் திடமிடப்பட்ட முயற்சிகளையும் வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் துவக்கத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களது நல்ல திட்டத்தையும், நண்பர்கள் குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு கிடைக்கப் போகும் நல்லாதரவையும் குறிக்கிறது.

    எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உதவுங்கள். பதற்றத்தில் இருந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தும் உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முயற்சிகளில் நன்றாக கவனம் செலுத்தலாம்.

  • image1

    இந்த அட்டை முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பினாலும் பணியினாலும் உள்ள சுமையினால் ஏற்பட்ட கவலையும் பதற்றத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய சகப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு பணிச்சுமையை குறைக்க முடியும் என்பதை குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது வெற்றியை நோக்கிய உங்கள் பாதையில் உள்ள பிரச்சினைகளைக் குறிக்கிறது. சூழ்நிலைக்கு தக்கவாறு உங்களை மாற்றிக் கொண்டு அவைகளை சந்திக்க வேண்டும்.

  • image1

    மந்திரக் கோல்களின் இளவரசன் முதலிடத்தில் வந்திருப்பது உங்கள் தீவிரமான சக்தி ஒட்டத்தையும் ஊக்கப்படுத்தும் சுபாவத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது சீரிய முயற்சியும் அறிவார்ந்தவர்களின் உதவியும் உங்களை வழி நடத்தும் என்பதை குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் உங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து நல்ல செய்திக்காக காத்திருப்பீர்களேயானால், மகிழ்ச்சி அடையுங்கள். அந்த செய்தி எந்த நேரத்திலும் வரலாம்.

  • image1

    மந்திரக் கோல்களின் இளவரசி முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய சுபாவத்தில் உள்ள ஆர்வத்தையும் இலக்குகளை எட்டக் கூடிய தன்மையையும் குறிக்கிறது.

    இந்த அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது மிக விரைவிலேயே வெற்றியைப் பெற எண்ணும் உங்களது விருப்பத்தை உணர்த்துகிறது. நீங்கள் எதிர்பாராத ஒன்று விரைவில் நிகழும்.

    இந்த அட்டை மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களது முயற்சியின் விளைவாக வர வேண்டிய வெற்றி எதிர்பாரா விதமாக உடனே வரும் என்பதை குறிக்கிறது.

  • image1

    மந்திரக் கோல்களின் அரசி முதலிடத்தில் வந்திருப்பது சரியான உங்களது சுபாவத்தையும், இறைவனின் மீதுள்ள பற்றுதலையும் குறிக்கிறது.

    உங்களது உள்பலத்தையும் அறிவையும் இது பறைசாற்றுகிறது. சரியான திசையில் முயற்சித்தால் உரிய நேரத்தில் வெற்றி பெறலாம்.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது சரியான திசையில் சரியான நேரத்தில் சரியாக முயற்சித்தால் அது வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

  • image1

    மந்திரக் கோல்களின் அரசன் முதலிடத்திலேயே வந்திருப்பது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் குறிக்கிறது.

    இந்த அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது கடினமாக பணியாற்றும் சக்தி வாய்ந்த மனப்பான்மையை குறிக்கிறது. உங்களுடைய பணியில் மேலும் பொறுப்புகளை நீங்கள் பெறுவீர்கள்.

    மந்திரக் கோல்களின் அரசன் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களது திட்டத்தின் வெற்றியைக் குறிக்கிறது. சரியான நேரத்தில் சரியான வாய்ப்பை கைப்பற்றிட பொறுமை உங்களுக்கு உதவும்.

  • image1

    இந்த அட்டை முதலிடத்தில் வந்திருப்பது உங்கள் வாழ்க்கையில் நிகழப் போகிற சாகசத்தையும் சந்தோஷத்தையும் குறிக்கிறது.

    கோப்பை அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களுடைய உறவுகளில் திருப்தியையும் நல்ல அனுபவத்தையும் குறிக்கிறது.

    இனி வரும் காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய எதிர்கால பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.

  • image1

    இரண்டு கோப்பைகள் கொண்ட இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய பணியில் மற்றொருவர்களோடு இணைந்து பணியாற்றி நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

    உங்களுடைய தொழிலிலும் காதலிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது. பாதையில் சில தடைகள் ஏற்பட்டாலும் அவைகளை கடந்து வெற்றிப் பெறுவீர்கள்.

    இந்த அட்டை மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களது வாழ்க்கையில் சில துரிதமான மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதையும், எனவே திட்டமிட்ட முயற்சிகள் அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

  • image1

    மூன்று கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் பெற்ற வெற்றியை உங்கள் இதயத்திற்கு உகந்த ஒருவருடன் நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை குறிக்கிறது. ஒவ்வொரு செயலையும் நீங்கள் மிக எச்சரிக்கையாக திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது, வெற்றி உங்களுக்கு அருகில் வந்துவிட்டதை குறிக்கிறது. மிக கடுமையாக முயற்சித்து வெற்றியை பெறவேண்டும்.

  • image1

    நான்கு கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது திருப்தியின்மையைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி உங்களது மகிழ்ச்சியின்மையையும் காட்டுகிறது.

    நான்கு கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது ஏமாற்றத்தையும் தோல்வியையும் குறிப்பதாகும்.

    நான்கு கோப்பைகள் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது தங்கமான வாய்ப்பை நீங்கள் தவறவிட்டதையும் இதற்கு மேல் வருகிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

  • image1

    ஐந்து கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது கவலையையும், இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தையும் குறிக்கிறது.

    ஐந்து கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் பயனளிக்காமல் போனதை குறிக்கிறது.

    ஐந்து கோப்பைகள் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நீங்கள் வீணடித்து விட்டதைக் குறிக்கிறது. பொறுமையும் சிரத்தையுடன் கூடிய முயற்சியையும் நல்ல நேரத்தை உங்களுக்கு மீண்டும் கொண்டு வரும்.

  • image1

    ஆறு கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது பழைய நிகழ்வுகளின் நினைவுகளையும், தற்போது நிலவும் மகிழ்ச்சியான சூழலையும் குறிக்கிறது.

    ஆறு கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது இதற்கு முன் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளை தந்திருப்பதை குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் ஆறு கோப்பைகள் வந்திருப்பது சிரத்தையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சியினால் கிட்டிய சாதகமான முடிவுகளினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குறிக்கிறது. நீங்கள் உங்களது பழைய நண்பரை விரைவில் சந்திப்பீர்கள்.

  • image1

    ஏழு கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய தற்போதைய மனநிலையைக் குறிக்கிறது. நீங்கள் கனவுலகில் வாழ்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

    ஏழு கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்கள் கனவுகள் நனவாக வேண்டும் என்பதற்காக நீங்கள் காத்திருப்பதை குறிக்கிறது. தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டால் மட்டுமே உங்களது கனவுகள் நனவாகும்.

    மூன்றாவது இடத்தில் ஏழு கோப்பைகள் வந்திருப்பது உங்கள் பணியிடத்தில் நீங்கள் எதிர்ப்பை சந்தித்து வருவதைக் குறிக்கிறது. விரைவில் உங்கள் முன்னேற்றத்திற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.

  • image1

    எட்டுக் கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய கவன ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாட்டையும் ஏதார்த்த அணுகுமுறை இல்லாமையையும் காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் எட்டுக் கோப்பைகள் வந்திருப்பது உங்கள் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. உங்களுடைய பணியிடத்தில் சிறந்த புதிய ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்.

    மூன்றாவது இடத்தில் எட்டுக் கோப்பைகள் வந்திருப்பது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. தற்போதுள்ள நிதிநிலைமை உங்களுக்கு எந்த விதத்திலும் திருப்தியளிக்கவில்லை என்பதை காட்டுகிறது.

  • image1

    ஒன்பது கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது உங்களது உள் திருப்தியை காட்டுகிறது. நெருங்கிய நண்பனை விட்டு பிரிந்தால் அது உங்களுக்கு துக்கத்தை தரும்.

    ஒன்பது கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களது சாதனைகளையும், உங்களது வாழ்க்கையை நிலைக்க உதவிய திறனையும் காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் ஒன்பது கோப்பைகள் வந்திருப்பது உங்களது நட்புறவு வாயிலாக நீங்கள் பெற்ற வெற்றியைக் குறிக்கிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவரின் மனதை வெல்வதற்கு சிறிது காலமாகும்.

  • image1

    பத்து கோப்பைகள் முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய பழைய நண்பர்களை விரைவில் நீங்கள் சந்திக்கப் போவதையும் அவர்களோடு உள்ள சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க போவதையும் குறிக்கிறது.

    பத்துக் கோப்பைகள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களுடைய தொழிலில் கணிசமான லாபத்தைச் சம்பாதித்திருப்பதைக் குறிக்கிறது. சீரிய முயற்சிகளை தொடருங்கள்.

    மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களது அட்டையில் எழுதியுள்ளது. ஏனென்றால் கடின உழைப்பு எப்போதும் பயன் தரும். நீங்கள் அனுபவிக்க வேண்டிய காலமிது.

  • image1

    கோப்பைகளின் இளவரசன் முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் படைப்புத் திறன் கொண்டவர் என்பதையும், வித்தியாசமாக எதையாவது முயற்சிப்பதில் விருப்பமுடையவர் என்பதையும் குறிக்கிறது.

    இந்த அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களுடைய காரண அறிவு உங்களை எதிர்காலத்தின் உன்னத சிகரங்களுக்கு கொண்டு செல்லும் என்பதைக் குறிக்கிறது.

    கோப்பைகளின் இளவரசன் மூன்றாவது இடத்தில் வநத்ருப்பது உங்களுக்கு வரக்கூடிய பாராட்டுக்களையும், உங்களின் முயற்சியின் காரணமாக உங்களது பாதையில் அவை வரவிருப்பதையும் குறிக்கிறது.

  • image1

    கோப்பைகளின் இளவரசி முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய தற்போதைய மனநிலையையும் மனரீதியான முயற்சிகளையும் குறிக்கிறது.

    கோப்பைகளின் இளவரசி இரண்டாவது இடத்தில் வந்திருப்பது மனரீதியிலான எழுச்சியைக் குறிக்கிறது. ஒரு பெண் வழியாக உங்களுக்கு உதவி வரும். அது உங்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.

    கோப்பைகளின் இளவரசி மூன்றாவது இடத்தில் வந்திருப்பது சரியான சிந்தனையையும் திட்டமிட்ட முயற்சியும் தேவை என்பதைக் குறிக்கிறது. பொறுமையாக இருங்கள் வெற்றி உங்களது பாதைக்கு வரும்.

  • image1

    கோப்பைகளின் அரசி முதலிடத்தில் வந்துள்ளது உங்களது வாழ்க்கை நிலையையும் படைப்பு தொடர்பான உங்களது கற்பனைத் திறனையும் வெளிப்படுத்துகிறது.

    கோப்பைகளின் அரசி இரண்டாவது இடத்தில் வந்திருப்பது எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் உங்களது மனோபாவத்தைக் காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் கோப்பைகளின் அரசி வந்திருப்பது சாதகமான முடிவு வரும் என்பதைக் குறிக்கிறது. சீரிய முயற்சிகளே எப்போதும் பலன் தரும் என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.

  • image1

    கோப்பைகளின் அரசன் முதலிடத்தில் வந்திருப்பது உங்களது தோள்களில் விழுந்துள்ள நிறைவேற்றுவதற்கு கடினமான பொறுப்புகளைக் குறிக்கிறது.

    கோப்பைகளின் அரசன் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களது சாதகமான நடத்தையையும் மன உறுதியையும் காட்டுகிறது. மற்றவர்களை விட வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    கோப்பைகளின் அரசன் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது சரியான திசையில் சரியான முயற்சிகள் மேற்கொண்டால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

  • image1

    உயர்ந்த வாள் முதலிடத்தில் வந்திருப்பது பழைய சிந்தனைகள் குறைவதையும், புதிய சிந்தனைகள் உருவாதையும் காட்டுகிறது.

    இந்த அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது புத்திசாலித் தனமான முயற்சிகளின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. சிறப்பான ஒருவர் உங்களின் வாழ்க்கையில் வர உள்ளார்.

    இந்த அட்டை மூன்றாவது இடத்தில் வந்திருப்பது திட்டமிட்ட சீரிய முயற்சியின் விளைவாக கிடைக்கும் வெற்றியின் அறிகுறியாகும்.

  • image1

    இரண்டு வாட்களின் அட்டை முதலிடத்தில் வந்திருப்பது அமைதியையும் உங்களது எதிர்காலம் தொடர்பாக ஏற்பட உள்ள புதிய உறவுகளையும் குறிக்கிறது.

    வாட்களின் அட்டை இரண்டாவது இடத்தில் வந்திருப்பது அலுவலகத்திலும், வீட்டிலும் நீங்கள் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சியைக் குறிக்கிறது.

    இரண்டு வாட்கள் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது உங்களது இலக்குகளில் விரைவில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் என்பதையும் குறிக்கிறது.

  • image1

    மூன்று வாட்கள் முதலிடத்தில் வந்திருப்பது பதற்றத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உறவுகளில் ஏற்படும் பிளவுகளையும் குறிக்கிறது. நீங்கள் விரும்பாத சூழ்நிலையில் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது.

    மூன்று வாட்கள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது பிரச்சனைக்கு தீர்வுக் காணும் முயற்சியையும் அது தோற்றுவிடுமோ என்ற அச்ச உணர்ச்சியையும் காட்டுகிறது

    மூன்று வாட்கள் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது தோல்வியையும் காயத்தையும் சங்கடமான சூழ்நிலையையும் குறிக்கிறது. பொறுமையாக இருங்கள். அந்தச் சூழல் விரைவில் விலகும்.

  • image1

    நான்கு வாட்கள் முதலிடத்தில் வந்திருப்பது நேர்த்தியான சிந்தனையைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் நல்ல சூழ்நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

    நான்கு வாட்கள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது ஒரு தற்காலிக ஒய்வையும் வரப்போகும் கடினமான பணியையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் நான்கு வாட்கள் வந்திருப்பது குறைந்த முயற்சியிலும் வெற்றிக் கிடைத்திருப்பதைக் குறிக்கிறது. உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள முயற்சிப்பதும் தெரிகிறது.

  • image1

    ஐந்து வாட்கள் முதலிடத்தில் வந்திருப்பது முன்பு பெற்ற தோல்வியையும் அதனால் உங்களது மனநிலை பிழன்றிருப்பதையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் ஐந்து வாட்கள் வந்திருப்பது தற்போது நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவதையும் அதனால் நீங்கள் ஒய்வற்றுயிருப்பதையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் ஐந்து வாட்கள் வந்திருப்பது உறவுகளில் ஏற்பட்டுள்ள தோல்வியையும் சொத்துக்களைக் குறைப்பதையும் காட்டுகிறது.

  • image1

    ஆறு வாட்கள் அட்டை முதலிடத்தில் வந்திருப்பது பழைய பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும் என்பதையும், வாழ்க்கையில் உங்களுக்கு புதியதொரு பாதை திறக்குமென்பதையும் காட்டுகிறது.

    ஆறு வாட்கள் இரண்டாவது இடத்தில் வந்திருப்பது புத்திசாலித் தனத்தையும், மிக சாதகமான நீண்ட பயணம் விரைவில் நிகழப் போவதையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் ஆறு வாட்கள் இருப்பது சாதகமான நேரத்தைக் குறிப்பது மட்டுமின்றி காதல் உறவுகளையும் உருவாவதைக் குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் ஏழு வாட்கள் அட்டை வந்திருப்பது சூழ்நிலை கட்டுப்பாட்டில் உள்ளதையும் புதிய துவக்கத்திற்கான சரியான நேரத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது மனப் பதற்றத்தைக் குறிக்கிறது. பிரச்சனைக்கு தீர்வுக் காண பொறுமையும் சீரிய முயற்சியும் தேவை.

    மூன்றாவது இடத்தில் ஏழு வாட்கள் வந்திருப்பது பிரச்சனையை தீர்ப்பதற்கு திறனும் அமைதியுற்ற மனமும் தேவை என்பதைக் குறிக்கிறது.

  • image1

    வாட்கள் எட்டு முதலிடத்தில் வந்திருப்பது ஆயத்தம் ஏதுமில்லாது இருப்பதும் உங்களைச் சுற்றியுள்ள சூழல் சாதகமாயில்லாததையும் குறிக்கிறது.

    வாட்கள் எட்டு இரண்டாவது இடத்தில் வந்திருப்பது பிரச்சனைகளையும் இனி வரும் காலங்களில் நீங்கள் சந்திக்கப் போகும் தடைகளையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வாட்கள் எட்டு வந்திருப்பது உங்களுடைய முயற்சிகள் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அது மட்டுமின்றி நல்ல எதிர்காலத்திற்கு பொறுமை அவசியம் என்பதையும் காட்டுகிறது.

  • image1

    வாட்கள் ஒன்பது முதலிடத்தில் வந்திருப்பது உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கக் கூடிய தூக்கத்தையும் பதட்டத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது சாதகமற்ற நேரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிக்க நீங்கள் திணறுவதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வாட்கள் ஒன்பது அட்டை வந்திருப்பது உங்களுக்கு எதிரான சூழ்நிலையிலும் நீங்கள் பொறுமை காக்கும் மனப்பான்மை உள்ளவர் என்பதைக் காட்டுகிறது. உங்களுடைய முயற்சியை காரணம் கண்டு செய்யுங்கள்.

  • image1

    முதலிடத்தில் வாட்கள் பத்து வந்திருப்பது வேலையின் சுமையைக் குறிக்கிறது. வேலை அதிகரிக்கும் போது உங்களுக்கு மனப்பதற்றமும் அதிகரிக்கும்.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது கடின பணியையும் முயற்சியையும் குறிக்கிறது. உங்களுடைய முயற்சிகளில் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    மூன்றாவது இடத்தில் வாட்கள் பத்து வந்திருப்பது குறிக்கோளிலும் சரியான முயற்சிகளிலும் பொய்மையும் அது உங்களை சாதகமற்ற இடத்திற்கும் சூழ்நிலைக்கும் கொண்டு செல்லப் போவதைக் குறிக்கிறது.

  • image1

    வாட்களில் இளவரசன் அட்டை முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய எளிமையான நேரடியான சிந்தனைகளைக் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களிடம் உள்ள அளவுக்கடந்த பேச்சுத் திறனையும் அதன் காரணமாக அதிகரிக்கும் உங்கள் தன்னம்பிக்கையையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வாட்களின் இளவரசன் உள்ளது உங்கள் புத்திசாலித்தனத்தையும் திருப்திக்கரமான உங்கள் நிலையையும் குறிக்கிறது.

  • image1

    மந்திரக் கோல்கள் ஐந்து அட்டை முதலிடத்தில் வந்திருப்பது போட்டியும் எதிர்ப்பும் அதிகரிப்பதைக் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது கூடுதல் சுமையையும் அதிகபட்ச கடின உழைப்பையும் போராட்டத்தையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் மந்திரக் கோல்கள் அட்டை ஐந்து இருப்பது முன் திட்டத்தின் அவசியத்தையும் தொடர்ந்த முயற்சியும் வெற்றிக்கு அவசியமானது கடின உழைப்பு என்பதையும் குறிக்கிறது.

  • image1

    வாட்களின் அரசி முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் சிறப்பான தகுதியைப் பெற்றிருப்பீர்கள் என்பதையும் அறிவார்ந்த நபர் என்பதையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது கடினமான சூழ்நிலைகளிலும் பிரச்சனைகளை சந்திக்கும் போதும் சீரிய முயற்சிகளை நீங்கள் முன்னெடுப்பவர் என்பதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வாட்களின் அரசி வந்திருப்பது துலாம் ராசிப் பெண்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்பதையும் வாழ்க்கையில் நல்ல நிலையை நீங்கள் எட்டுவீர்கள் என்பதையும் குறிக்கிறது.

  • image1

    வாட்களின் அரசன் முதலிடத்தில் வந்திருப்பது உங்களைச் சூழ்ந்த கவலைகளை நீங்கள் ஏற்கெனவே வென்று விட்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. ஆனால் இன்னமும் நீங்கள் உங்களது நிலையை உயர்த்திக் கொள்ளும் முயற்சியையும் காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய மனதில் ஏராளமான திட்டங்கள் உள்ளதையும் அதனை நீங்கள் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வாட்களின் அரசன் வந்திருப்பது சரியான திசையில் சீரிய முயற்சிகளின் மூலம் நீங்கள் வெற்றிப் பெறப் போவதைக் குறிக்கிறது.

  • image1

    வட்டுகளில் ஏஸ் முதலிடத்தில் வந்திருப்பது உங்களது தொழிலிலிருந்து முக்கியச் செய்தியை எதிர்பார்த்து நீங்கள் காத்திருப்பதைக் காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது உங்களுடைய பணியை வெற்றிக் கரமாக முடிக்க பெரும்முயற்சிகள் தேவைப்படுவதைக் குறிக்கிறது.

    வட்டுகளில் ஏஸ் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது வெற்றியின் அறிகுறியாகும். இப்போது நீங்கள் ஒரு தொழிலைத் துவங்கினால் இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் இருப்பீர்கள்.

  • image1

    வட்டுகளில் இரண்டு அட்டை முதலிடத்தில் வந்திருப்பது வாழ்க்கையின் நிலைத்தன்மையும் சமநிலையும் இருப்பதைக் காட்டுகிறது.

    இரண்டாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது பிரச்சனைகளும் சாதகமற்ற சூழ்நிலைகள் நிலவுவதையும் குறுகிய காலத்திற்கு இவைகளை நீங்கள் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் இரண்டு இருப்பது வெற்றியைக் குறிக்கிறது. ஆனால் சரியான திசையில் தொடர்ந்து சீரிய முயற்சி மேற்கொண்டால் மட்டுமே வெற்றிக் கிடைக்கும்.

  • image1

    வட்டுக்களில் மூன்று முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் கடினமாக உழைப்பவர் என்பதையும் நேர்மையான நபர் என்பதையும் உங்களுடைய முயற்சியில் மட்டுமே நம்பிக்கை வைப்பவர் என்பதையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் மூன்று வந்திருப்பது உங்கள் கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம் என்பதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் மூன்று வந்திருப்பது கூட்டு முயற்சியின் மூலமும் சீரிய கடின உழைப்பின் மூலமும் மட்டுமே உங்களால் வெற்றிப் பெற முடியும் என்பதைக் காட்டுகிறது. இறைவனின் மீதுள்ள உங்கள் நம்பிக்கைப் பெருகும்.

  • image1

    வட்டுக்களில் நான்கு அட்டை முதலிடத்தில் வந்திருப்பது நீங்கள் சாதுர்யமான தன்னம்பிக்கை மிகுந்த நபர் என்பதைக் காட்டுகிறது. ஒரு புதிய முயற்சியைத் துவங்கும் போது அசாதாரண உணர்ச்சி ஏற்படுவது சாதாரணமானதுதான்.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் நான்கு வந்திருப்பது உங்களது பணியில் சகத்தோழர்களுடன் இணைந்து நீங்கள் மேற்கொள்ளப் போகும் முயற்சி எதிர்காலத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பை உருவாக்கும்.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் நான்கு வந்திருப்பது வெற்றியும் அமைதியும் உங்களுக்காக காத்திருப்பது திட்டமிட்ட முயற்சிகள் வெற்றிப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்பதையும் குறிக்கிறது.

  • image1

    வட்டுக்களில் ஐந்து அட்டை முதலிடத்தில் இருப்பது உங்களுடைய வழியில் உள்ள தடைகளையும் எதிர் சூழல்களையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் ஐந்து வந்திருப்பது அசாதாரணமான கடின உழைப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தையும் நிலையற்றத் தன்மையையும் குறிக்கிறது.

    வட்டுக்களில் ஐந்து மூன்றாவது இடத்தில் வந்திருப்பது வெற்றிக்கானப் பாதையில் நீங்கள் எதிர்கொள்ளப் போகும் தடைகளைக் குறிக்கிறது. நீங்கள் மிகப் பொறுமையாக இருக்க வேண்டும்

  • image1

    வட்டுக்களில் ஆறு அட்டை முதலிடத்தில் வந்திருப்பது சாகசத்தையும் உங்களின் சாதனைகளால் கிடைக்கப் போகும் திருப்தியையும் குறிக்கிறது.

    வட்டுக்களில் ஆறு இரண்டாவது இடத்தில் வந்திருப்பது உங்களது முயற்சிகள் உங்களது நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதைக் காட்டுகிறது. உங்களது தாராள மனப்பான்மையையும் காட்டுகிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் ஆறு வந்திருப்பது நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் லாபத்தையும் குறிக்கிறது. எனவே நீங்கள் எதற்காகவும் கவலைப் படவேண்டும்.

  • image1

    வட்டுக்களில் ஏழு முதலிடத்தில் வந்திருப்பது கவன ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளதையும், தோல்வியின் அடையாளத்தையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் ஏழு வந்திருப்பது உங்களது தன்னம்பிக்கையை குறைக்கும் விதமாக சில முயற்சிகள் பயனளிக்காமல் போவதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் இந்த அட்டை வந்திருப்பது பதட்டத்தையும் தீவிரத்தையும் உங்களை தவறான திசையில் அழைத்துச் செல்லக்கூடிய முயற்சியும் குறிக்கிறது.

  • image1

    வட்டுக்களில் எட்டு முதலிடத்தில் இருப்பது நீண்ட கால பலனுக்கு முயற்சிக்காமல் தற்காலிக வெற்றியை நீங்கள் எதிர்பார்ப்பதையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் எட்டு வந்திருப்பது உங்களுடைய இலக்குகளை எட்டுவதற்கு தொடர்ந்து முயற்சியும் பொறுமையும் கடின உழைப்பும் தேவை என்பதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் எட்டு வந்திருப்பது தொடர்ந்து நீங்கள் முயற்சித்தால் உங்களது இலக்கை நீங்கள் எட்டவீர்கள் என்பதைக் காடடுகிறது.

  • image1

    வட்டுக்களில் ஒன்பது முதலிடத்தில் வந்திருப்பது உங்களுடைய எதிர்கால வாழ்வில் சாகசத்தையும் கேளிக்கையையும் வெற்றியையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களில் ஒன்பது வந்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் இலாபத்தையும் நோக்கி உங்களை அழைத்துச் செல்லக் கூடிய எதிர்பாராத மாற்றத்தைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் ஒன்பது வந்திருப்பது எதிர்பாராத இலாபத்தை நீங்கள் அடைய போவதைக் குறிக்கிறது. தொழிலில் உங்களது போட்டியாளர்களை நீங்கள் மீஞ்சுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

  • image1

    வட்டுக்களில் பத்து முதலிடத்தில் வந்திருப்பது எதிர்காலத்தில் நீங்கள் நிதி ரீதியிலான சிக்கல்களை சந்திப்பீர்கள் எனக் காட்டுகிறது. வணிகத்திலும், முதலீடுகளிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

    வட்டுக்களில் பத்து இரண்டாவது இடத்தில் வந்திருப்பது மூத்தவர்களிடமிருந்து உதவியையும் அதன் மூலமாக உங்கள் குடும்பச் சொத்தில் நீங்கள் எதிர்பாராத பங்கை பெறப் போவதையும் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களில் பத்து வந்திருப்பது நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் திருப்தியையும் குறிக்கிறது. மன அமைதியையும் திருப்தியையும் நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

  • image1

    வட்டுக்களில் இளவரசன் முதலிடத்தில் வந்திருப்பது திட்டமிட்ட முயற்சிகளையும் கடின உழைப்பையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களின் இளவரசன் வந்திருப்பது திட்டமிட்ட முயற்சிகளும் யதார்த்த அணுகுமுறைகளும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதைக் குறிக்கின்றன.

    வட்டுக்களின் இளவரசன் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது கடின உழைப்பாலும் நேர்மையான முயற்சியாலும் உங்களது கனவுகளை நீங்கள் நனவாக்குவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

  • image1

    வட்டுக்களின் இளவரசி அட்டை முதலிடத்தில் வந்திருப்பது பழையப் பழக்கங்கள் மற்றும் முறைகளை எதிர்கொள்ளும் போது நீங்கள் அதிகத் துணிவுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களின் இளவரசி வந்திருப்பது தவறான திசையில் உங்களைக் கொண்டு செல்லக் கூடிய திட்டமிடப்படாத முயற்சிகளைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களின் இளவரசி வந்திருப்பது வழிகாட்டுதலுக்காக மற்றவர்களை நீங்கள் சார்ந்திருப்பதைக் குறிக்கிறது. உங்களது அணுகுமுறையில் நீங்கள் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும்.

  • image1

    வட்டுக்களின் அரசி அட்டை வந்திருப்பது உங்களது தாராளமான தன்மையையும் தன்னம்பிக்கையையும் நிதி தொடர்பான விவகாரங்களில் சுயசார்பையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களின் அரசி வந்திருப்பது இனி வரும் காலம் உங்களுக்கு சாதகமானது என்பதைக் குறிக்கிறது. உங்களது இலக்கின் மீது நீங்கள் குறியாய் முயற்சிக்க வேண்டும்.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களின் அரசி வந்திருப்பது உங்களது இலக்கை எட்டியதனால் நிதி ஆதாரங்களில் பாதுகாப்பும் வாழ்க்கையில் நிலைத் தன்மையுள்ளதையும் குறிக்கிறது.

  • image1

    முதலிடத்தில் வட்டுக்களின் அரசன் வந்திருப்பது உங்களது யதார்த்த அறிவையும் பொறுமையையும் திட்டமிட்ட முயற்சிகளையும் குறிக்கிறது.

    இரண்டாவது இடத்தில் வட்டுக்களின் அரசன் வந்திருப்பது எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கு நீங்கள் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

    மூன்றாவது இடத்தில் வட்டுக்களின் அரசன் வந்திருப்பது யதார்த்தமான உங்கள் முயற்சிகளில் கிடைத்த வெற்றியைக் குறிக்கின்றது. இனி வரும் காலங்களில் பொறுமை உங்களது வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கப் போகிறது.

டெரட் என்பது ஒரு மர்மமான உலகம், அது எதிர்காலத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல வழிமுறையாகும். இந்த வார்த்தையின் தோற்றம் கூட மர்மமாகவே உள்ளது. இது வெறும் வார்த்தைகள் அல்ல எதிர்காலமும் வாழ்க்கையும் சார்ந்தது. ஒரு சிலர் இந்த வார்த்தை மைனர் அர்கானா கார்டுகளுடன் தொடர்புடைய டெரொச்சி என்னும் வார்த்தையிலிருந்து உருவானது என்று கருதுகின்றனர். ஆனால் சிலர் இது கார்டுகளுக்கு பின்னால் காணப்படும் குறுக்குவழியான ட்ரொட்டோரிலிருந்து உருவானதாக கருதுகின்றனர். இது எதிர்காலத்தை பற்றிய ஒரு மர்மமான கதையாகும்.

டெரட் டெக் குவிப்பானது, மேஜர் அர்கானா மற்றும் மைனர் ஆர்கானா என பிரிக்கப்பட்ட 78 கார்ட்டுகளை உடையதாகும். ஆர்கானா என்னும் வார்த்தை, ஆர்கானேஸ் என்ற இலத்தீன் மொழியில் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் 'மர்மமான தனிப்பட்ட வளர்ச்சி' என்பதாகும். மேஜர் ஆர்க்கானா என்பது மாய மந்திரங்களைப் பற்றி அறவியலைப் படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய பாடமாகும். இது சின்னங்கள் வழியாக எழுதப்பட்ட போதனைகளைக் கொண்டதாகும்.

இது பல்வேறு மத குழுக்கள் மற்றும் பழங்குடியினரின் மர்மமான கற்பித்தல் முறை ஆகும். டெரட்டின் தத்துவம் பண்டைய யூத பாரம்பரியமான பைபிளின் மாய விளக்கமாக கொண்ட கபாலாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. வார்த்தைகள் மற்றும் எண்களில் தெய்வீக சக்தியால் நிரப்பப்பட்டுள்ளது இது பிரபலமான குறி சொல்லும் முறையாக உள்ளது. இந்த மர்மத்தையும் இதனை பற்றிய அசாதாரணமான அறிவையும் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்வோம்.

டாரட் கணிப்பு எப்படி தெரியும் கார்டைத் தேர்வு செய்க

  • முதலில் உங்களுடைய கேள்வியை ஒரு முறைக்குப் பலமுறை ஆழமாக யோசியுங்கள். அதனை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
  • அதன்பிறகு "அட்டையை தேர்ந்தெடுக்கவும்" என்பதை கிளிக் செய்து, கட்டில் இருந்து 3 அட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு செய்யவும்.
  • முதல் அட்டை கேள்வியை நி்னைத்த பொழுது இருந்த உங்களது மனநிலையை காட்டும்.
  • இரண்டாவது அட்டை உங்கள் ஆசைகளை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை குறிப்பிடும்.
  • மூன்றாவது அட்டை உங்கள் கேள்விக்கு பதில் கூறும்.

திருப்பரங்குன்றத்தில் காவடி, பால்குடம்.. களைகட்டும் பங்குனி ...

திருப்பரங்குன்றத்தில் காவடி, பால்குடம்.. களைகட்டும் பங்குனி உத்திரம்..!
முருகப்பெருமானுக்கு புனிதமான பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள ...

இந்த ராசிக்காரர்களுக்கு பதவிகள் தொடர்பான பொறுப்புகள் ...

இந்த ராசிக்காரர்களுக்கு பதவிகள் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.04.2025)!
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...

திருப்பதியில் தொடங்கியது வசந்த உற்சவ விழா.. குவிந்தது ...

திருப்பதியில் தொடங்கியது வசந்த உற்சவ விழா.. குவிந்தது பக்தர்கள் கூட்டம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ...

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் விஷயங்களில் கவனம் தேவை! - ...

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் விஷயங்களில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (10.04.2025)!
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...

ஆன்மீக களை கட்டும் பழனி.. இன்று தங்கரதம்.. நாளை ...

ஆன்மீக களை கட்டும் பழனி.. இன்று தங்கரதம்.. நாளை திருக்கல்யாணம்..!
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ...