திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:24 IST)

ரிஷபம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 

அக்டோபர்  3 ந்தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ரண,  ருண, ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருக்கும்  சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காணும் ரிஷபராசி அன்பர்களே! இந்த மாதம்  மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில்  கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த  காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.
 
குடும்பத்தில் உங்களுக்கு லாபம் உண்டாகும். உடல்நிலையில் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டி வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது.  முக்கிய நபர்களிடம் கலந்துரையாடும் போது கவனம் தேவை. ஆறாமிடமான ரண, ருண, ரோக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருப்பதாலும் அவரே  உங்கள் ராசி அதிபதியாகியதாலும் உங்களது கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.
 
தொழிலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு வேண்டாம். புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். சுமூகமாக சென்று கொண்டிருக்கும். தொழிலில் கீர்த்தி  உண்டாகும்.
 
உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளைய பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம். சிலர் தேவையான உதவிகளை கேட்டு பெற வேண்டியிருக்கும். பெண்கள்  உற்சாகமாக செயல்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நற்பெயர் எடுப்பதற்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். மாணவர்கள் பொறுமையுடனும்,  நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேற்படிப்பை தொடர முயற்சி செய்யுங்கள்.
 
கலைத் துறையினருக்கு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத  வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள்.
 
அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை  தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள்  எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும்.  சக ஊழியர்கள் மேல்  அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை  திறமையாக செய்து முடிப்பீர்கள்.
 
ரோகிணி: இந்த மாதம் குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்.  மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின்  நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில்  வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
 
பரிகாரம்: அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16.
 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 8, 9.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.