ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 மே 2020 (10:22 IST)

மாஸ்டர் ட்ரைலர் 6 தடவ பார்த்துட்டேன்... தளபதியின் டயலாக் வெறித்தனம்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் ட்ரைலர் குறித்து கேட்டதற்கு,  " நான் மாஸ்டர் ட்ரெய்லரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் ட்ரைலர் வெளிவரும். எவ்வளவு தாமதமாக வந்தாலும் காத்திருக்கும் தளபதி ரசிகர்களுக்கு worth ஆனதாக இருக்கும். குறிப்பாக ட்ரைலரின் விஜய் சாரின் ஒரு டயலாக் வெறித்தனமாக இருக்கும் என கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டரில் நெகடீவ் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.