உட்டாலக்கடி உண்டிக்கோல் – ஆங்க்ரி பேர்ட்ஸ் 2 தமிழ் ட்ரெய்லர்

angry birds
Last Modified சனி, 27 ஜூலை 2019 (17:42 IST)
ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்ற ஆங்க்ரி பேர்ட்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் தமிழ் ட்ரெய்லரை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அண்ட்ராய்ட் போன் ஆரம்பித்த காலம் துவங்கி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட வீடியோ கேம் ஆங்க்ரி பேர்ட்ஸ். இந்த வீடியோகேமை மையமாக கொண்டு 2016ல் சோனி நிறுவனம் ஆங்க்ரி பேர்ட்ஸ் திரைப்படத்தை உருவாக்கியது. அந்த திரைப்படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு, வசூலையும் அள்ளியது. அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
angry birds

முதல் பாகத்தில் பறவைகள் வாழும் தீவுக்கும், பன்றிகள் வாழும் தீவுக்கும் இடையே நடக்கும் மோதலை காமெடியாக சொல்லியிருப்பார்கள். இந்த பாகத்தில் புதியதாக மூன்றாவதாக ஒரு தீவு இருப்பதை பன்றிகளின் ராஜா கண்டுபிடிக்கிறது. அங்கிருக்கும் ராட்சத பறவைகளால் பறவை தீவு, பன்றி தீவு இரண்டுக்குமே ஆபத்து ஏற்பட போவதை அறிந்த அது ஆங்க்ரி பேர்ட்ஸின் உதவியை நாடுகிறது. பன்றிகளும், பறவைகளும் இணைந்து புதிய எதிரியை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே கதை.

ஆங்க்ரி பேர்ட்ஸ் திரைப்படத்தின் சிறப்பே அதன் நகைச்சுவையான தமிழ் டப்பிங்தான். அந்த கலகலக்கும் நகைச்சுவை ட்ரெய்லரின் ஒவ்வொரு வசனத்திலும் தெறிக்கிறது. ஆங்க்ரி பேர்ட்ஸ் 2ன் காமெடி தமிழ் ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு..


இதில் மேலும் படிக்கவும் :