நயன்தாரா ஆடையில் கில்மாவாக போஸ் கொடுத்த யோகி பாபு.! லைக்ஸ் சும்மா அள்ளுது!

Last Updated: வியாழன், 4 ஏப்ரல் 2019 (11:03 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது.  
 
பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  மேலும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது.  
 
இந்நிலையில் தற்போது யோகிபாபு இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறார். காரணம், பாவாடை சட்டை அணிந்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில்  பெருத்த பெண் குட்டி போன்று தோற்றமளிக்கும் யோகி பாபுவை கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாரா அணிந்த இந்த ஆடை உங்களுக்கு கில்மாவாக இருக்கிறது என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ் . 


இதில் மேலும் படிக்கவும் :