யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்

Last Updated: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (14:33 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் ஃபைனலுக்கு செல்வார்கள். 
இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தற்போது இரண்டு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதாவது ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி ஒரு புறமும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மற்றொரு புறமும் உள்ளனர்.
இதில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் எரிச்சலடைய வைக்கிறது. இது பற்றி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், "தோழிகளாக இருப்பது சரி, ஆனால் நீங்கள் இருவரும் இப்படி கூட்டணி சேர்ந்து டாஸ்க் செய்வது சரியில்லை. அது  உங்களை பலவீனமாக காட்டுவதோடு, மற்றவர்களையும் அது கெடுக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ளார். எனவே “உங்கள் உத்தியை  மாற்றிக்கொள்ளுங்கள்” என காயத்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :