எமன் படத்தின் 4 நிமிட வீடியோ


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (19:36 IST)
சைத்தான் படம் போலவே விஜய் ஆண்டனியின் அடுத்த படமான எமன் படத்தின் 4 நிமிட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.


 

 
படம் வெளியாகும் படத்தின் முதல் 10 நிமிட காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டினார் விஜய் ஆண்டனி. சைத்தான் படம் முதன்முதலாக இதுபோன்று வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி அடுத்த படமான எமன் வரும் 24ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது. 
 
இந்நிலையில் அப்படத்தின் 4 நிமிட காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இந்த படத்தின் முக்கியமான காட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தொடர்ந்து அவரது படங்களுக்கு இதுபோன்ற விளம்பரத்தை கொடுத்து வருகிறார். சைத்தான் படம் வெற்றிக்கு இந்த முறையான விளம்பரம் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.
 
 
நன்றி: Moviebuff Tamil


இதில் மேலும் படிக்கவும் :