திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 7 மே 2016 (11:00 IST)

நடிகைக்கு அழகைவிட முக்கியமானது எது? - நிக்கி கல்ராணி சொல்லும் ரகசியம்

நடிகைக்கு அழகைவிட முக்கியமானது எது? - நிக்கி கல்ராணி சொல்லும் ரகசியம்

நடிகையின் ஆதாரமும், மூலதனமும் அழகு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால், அதைவிட முக்கியமான வேறு சிலவும் இருக்கிறது என்றார் நிக்கி கல்ராணி.


 


இந்த சந்திப்பு நடந்தது கோ 2 பத்திரிகையாளர் சந்திப்பில்.
 
கோ 2 படம் குறித்து பேசியவர், "தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் அரசியலையும் ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்" என்றார்.
 
கோ 2 படத்தில் நிக்கி கல்ராணிக்கு பத்திரிகையாளர் வேடம். அது பற்றி கேட்டபோதுதான், நடிகைக்கு அழகைவிட அதிமுக்கியமாக தேவைப்படும் விஷயம் குறித்து பேசினார்.
 
"இந்தப் படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவர்கள் எப்படி மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். 
 
என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது. உழைப்பும் திறமையும் மிக மிக முக்கியம்" என்றார்.
 
நெசந்தானே.