ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (21:34 IST)

தொடரும் தோல்விகள்! ஜி.வி.பிரகாஷை கைவிடுகிறாரா பிரபல இயக்குனர்?

ஜி.வி.பிரகாஷ் நடித்த முதல் படமான 'டார்லிங்' மற்றும் இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லைன்ன  நயன்தாரா' ஆகிய படங்கள் தெரியாத்தனமாக வெற்றி பெற்றுவிட்டதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை புக் செய்ய போட்டி போட்டனர் ஆனால் அதற்கு பின்னர் வெளியான 'கடவுள் இருக்குறான் குமாரு, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு', புரூஸ்லி ஆகிய படங்கள் செம அடி வாங்கியது.



 


தோற்றத்திற்கு ஏற்ற கேரக்டரை தேர்வு செய்யாமல் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஆக்சன் படங்களை தேர்வு செய்ததுதான் ஜி.வி.பிரகாஷின் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவிருப்பதாக கூறப்பட்ட 'சர்வம் தலமயம்' என்ற படம் கிட்டத்தட்ட டிராப் என்றே கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தாமல் ராஜீவ் மேனன் தற்போது இந்தியில் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கின்றாராம். சர்வம் தலமயம்' எப்போது தொடங்கும் என்ற செய்தி இன்றுவரை உறுதியாக தெரியவில்லை என்பதே உண்மை.