திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (16:56 IST)

விஜயகாந்தை இயக்க முயற்சி செய்த விவேக்! ஆனால் நிறைவேறாத ஆசை!

மறைந்த தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர் விவேக்கின் மரணத்தால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் திரையுலக சேவை பற்றி பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அனைவருக்கும் நடிகராக அறியப்பட்ட விவேக்குக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்ததாம். சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டுமென்று வந்த அவர் ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் நடிகராக மாறினார். ஆனாலும் நடிகராக இருந்த போதே விஜயகாந்துக்காக ஒரு கதை தயார் செய்து அவருக்கு சொன்னாராம். ஆனால் பல காரணங்களால் அந்த படம் நடக்காமலேயே போய்விட்டது. விவேக்கும் கடைசி வரை இயக்குனர் ஆகவில்லை.