ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (08:31 IST)

முன்னாள் முதல்வரின் பயோபிக் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா விஷால்?

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் படத்தில் நடிக்க  நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் ப்ளாப் ஆன நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தில் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.