நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? விஷால் பதில்

Last Modified சனி, 9 மார்ச் 2019 (09:34 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன், கமல், சீமான்,
என இப்போதைக்கு ஐந்து முனை போட்டி உள்ளது. தேமுதிக என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொருத்து 6வது அணியா? இல்லையா? என்பது தெரிய வரும்
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்து பின்னர் போட்டியிட முடியாமல் போன நடிகர் விஷால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கட்டும். அதே போல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கிட்டே இருக்கோம். இன்னும் அறிவிக்கவில்லை. முதலில் அறிவிக்கட்டும். கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான் என்று கூறினார்.
இந்த நிலையில் விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் தற்போது பிசியாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :