தொடருது விஷாலின் நற்பணி


Suresh| Last Updated: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (18:10 IST)
சென்னை வெள்ளச் சேதத்தின்போது விஷால் மற்றும் நடிகர் சங்கத்தினர் பல்வேறு உதவிகளை செய்தனர்.

 

 
தேவை இருப்பவர்களுக்கு தேடிச்சென்று நிவாரண பணிகளை செய்தார்கள். கடலூருக்கும் சென்று பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.
 
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
 
இதில் விஷால் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
அப்போது பேசிய அவர், "நாங்கள் எப்போதும் எந்த நேரத்திலும் உடன் இருந்து உதவ தயாராக இருக்கிறோம்.
 
சாதி மதம் கடந்து மனித நேயத்துடன் இந்த உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த மனப்பான்மை வளர வேண்டும்" என்றார்.
 
தொடரட்டும் உங்கள் பணி.


இதில் மேலும் படிக்கவும் :