பாலிவுட்டில் என்ட்ரியாகும் விராட் கோலி

Virat Kohli
Last Updated: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (13:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் திறமை பற்றி உலகமே அறிந்தது தான். கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனைகளையும் இவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பத்து வருடங்களுக்குப் பிறகு மற்றுமொரு அறிமுகம். என்னால் காத்திருக்க முடியவில்லை.  இவ்வாறு  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


கோலி வெளியிட்டுள்ள போஸ்டரில் அவர் ஆக்சன் காட்சியில் ஹீரோவாக வருவது போலவும் பின்னணியில் பல வாகனங்கள் அணிவகுத்து நிற்பது போலவும் இருக்கின்றன.
இந்த போஸ்டருக்கு ”டிரைலர்” என்று அவர் டைட்டில் வைத்திருக்கிறார். அதன் கீழே கேப்ஷனாக ’தி மூவி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையாலும் திரைப்படமா அல்லது விளம்பரத்துக்கு ஆதாயம் தேடுகின்ற உக்தியா என்று சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :