ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (07:23 IST)

விஐபி 2 படம் எப்படி? வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து

தனுஷ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும், விஐபி 2 திரைப்படம் வெளிநாடுகளில் பிரிமியர் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்கள் இடைவேளை முடிந்தவுடன் படம் குறித்த விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.



 
 
முதல் பாதியில் மனைவியை சமாளிப்பது எப்படி? மற்றும் வசுந்தராவிடம் சவால் விடுவது ஆகிய காட்சிகளே அதிகம் இருப்பதாகவும், இதுவரை படம் ஓகே என்றும் இருப்பினும் முதல்பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து அனிருத்தின் இசை இல்லாதது ஒரு பெரிய குறையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இடைவேளை டுவிஸ்ட் ஓகே என்றும் கூறும் ரசிகர்கள் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சில நிமிடங்அக்ளில் தமிழகத்திலும் காட்சி ஆரம்பிக்க இருப்பதை அடுத்து இந்த படத்தின் விமர்சனத்தை முழுஅளவில் விரைவில் பார்ப்போம்