ஹீரோ, வில்லன் - விக்ராந்தின் இரட்டைக் குதிரை சவாரி

Mahalakshmi| Last Modified புதன், 3 ஜூன் 2015 (15:09 IST)
நாயகனாக நடித்த போது கிடைக்காத பேரும், பாராட்டும் பாண்டிய நாடு படத்தில் நாயகனின் நண்பனாக வந்த சின்ன வேடத்துக்கு விக்ராந்துக்கு கிடைத்தது. அந்த வரவேற்பு அவரை நிறைய சிந்திக்க வைத்திருக்க வேண்டும்.
திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கெத்து படத்தில் விக்ராந்த் வில்லனாக வருகிறார். சாதாரண வில்லன் கிடையாது, இந்திய கடற்படையின் பயிற்சி பெற்ற வீரராக இதில் நடிக்கிறார்.

இந்த புதிய வில்லன் வேடம் விக்ராந்துக்கு திருப்தியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் செய்த தவறுகளை திருத்தியிருப்பதாகவும் திருப்திப்பட்டுக் கொள்கிறார். ஒருபுறம் வில்லனாக நடித்துக் கொண்டே, தாக்க தாக்க என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை விக்ராந்தின் அண்ணன் இயக்குகிறார்.
இந்த இரட்டைக் குதிரை சவாரி விக்ராந்துக்கு சுகமானதாக அமையட்டும்.


இதில் மேலும் படிக்கவும் :