திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:05 IST)

கடம்பூர் மாளிகை வேணாம்.. தஞ்சை புறப்பட்ட ஆதித்த கரிகாலர்! – விக்ரம் போட்ட ட்வீட்!

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தஞ்சைக்கு பயணம் மேற்கொள்வதாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தற்போது ஆதித்த கரிகாலராகவே மாறி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Ponniyin Selvan

அதில் ” சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, குந்தவையாக நடித்த த்ரிஷா, அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி ஆகியோரையும் டேக் செய்துள்ளார். இதனால் பட ரிலீஸுக்கு முன்னதாக இவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.