கமலுடன் கைகோர்த்த விஜய் சேதுபதி!

Last Updated: வியாழன், 29 நவம்பர் 2018 (18:27 IST)
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை கஜா புயல் தாக்கி, அதிக சிரமத்துக்குள்ளாக்கியது. இதனால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்கள் புயலில் சிக்கி பரிதவித்தனர். 
இந்நிலையில், தமிழக மக்களுக்கு உதவும்படி கேரள அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார், நடிகரும் மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான கமல் ஹாசன். கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தமிழக முதல்வரின் நிவாரணத் தொகைக்கு ரூ.10 கோடியை அளித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 
 
இதனைப் பாராட்டியும், இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுருக்கிறார் கமல். 
 
தவிர, நடிகர் விஜய்சேதுபதியும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :