ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:32 IST)

ஜவான் படத்தில் விஜய் நடித்திருக்கிறாரா? அட்லி அளித்த பதில்!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஷாருக் கானின் கடைசி படமான பதான் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழிலும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் பரவின.

இது சம்மந்தமாக இப்போது பேசியுள்ள இயக்குனர் அட்லி “இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை. ஆனால் நான் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.