ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (09:30 IST)

சிங்கப்பெண்ணே பாடலின் அட்டகாசமான வரிகள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் சாதிக்க விரும்பும் பெண்களுக்கான தேசிய கீதம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலின் வரிகள், விஜய் ரசிகர்களின் கருத்தை உண்மை என்பதுபோல் நிருபிக்கின்றது. இதோ இந்த பாடலின் வரிகள்
 
மாதரே மாதரே
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள் இனிமேல் உங்கள் 
உலகம் பார்க்க
போகுது மனிதியின் வீரங்கள்
 
சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றிச்சிங்க முகம் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
 
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த 
தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு
 
உன்னால் முடியாதென்று 
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் 
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
உன்னால் முடியாதென்று 
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் 
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
உலகத்தின் வலியெல்லாம் 
வந்தால் என்ன உன் முன்னே
பிரசவத்தின் வலியை 
தாண்ட பிறந்த அக்னி சிறகே
எரிந்து வா, 
உலகை அழைப்போம் உயர்ந்து வா
அக்னி சிறகே எரிந்து வா,
உலகை அழைப்போம் உயர்ந்து வா
உன் ஒளிவிடும் கனாவை சேர்ப்போம் வா...
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா...
 
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
 
இதோ காலங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வரும்
உனக்காக நீயே உதிப்பாயம்மா
உனது ஆற்றம் உணர்ந்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
 
சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றிச்சிங்க 
முகம் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் 
அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி நீ பயமின்றி நீ 
பயமின்றிதுணிந்து செல்லு