மீரா மிதுனைப் படங்களில் புக் செய்தால் போராட்டம் செய்வோம் – கொந்தளிக்கும் விஜய் ரசிகர் !

Last Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:53 IST)

நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தவறாக பேசிய நடிகை மீரா மிதுனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

நடிகை மீரா மிதுன் நடித்ததே சில படங்கள் தான். ஆனால்
அவர் எப்போதும் அவரது படங்களுக்காக பேசப்பட்டதே இல்லை. ஏதேனும் சர்ச்சைகளை இழுத்துக் கொண்டு வந்து அவ்வப்போது சமுகவலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் மையப்புள்ளியாக இருப்பார். அந்த வகையில் அவர் இப்போது கைவைத்திருப்பது நடிகர் சூர்யாவை. சூர்யாவோடு தானா சேந்த கூட்டம் படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார் மீரா. ஆனால் அந்த படத்தில் தன் காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்ததாகவும் சூர்யா எல்லாக் காட்சிகளையும் 10 முறைக்கும் மேல் நடித்ததாகவும், அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்ட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். விஜய்யின் ரசிகரும் அவருக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவருமான ஈ சி ஆர் சரவணன் என்பவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘ஒருவரின் நடிப்பைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்வை விமர்சிக்கக் கூடாது. மீராமிதுன் தான் பேசியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரை யாரும் படங்களில் புக் செய்ய கூடாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டம் செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :