ரேப் செஞ்சா உடனே தூக்குல போடுங்க: நடிகை வரலட்சுமியின் ஆவேச வீடியோ

varalakshmi
ரேப் செஞ்சா உடனே தூக்குல போடுங்க
Last Modified வெள்ளி, 3 ஜூலை 2020 (12:18 IST)
பெண் குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரமான சம்பவங்கள் தமிழகம் உள்பட இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்து வருவது சமூக ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்ய சமீபத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆனாலும் இந்த சட்டம் இயற்றிய பின்னரும் குற்றங்கள் குறைந்தபாடில்லை என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது
இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஜெயப்ரியா என்ற 7 வயது சிறுமியை மூன்று காமக் கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தை செய்த மூவருக்கும் உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் சமூகவலைதளத்தில் மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரேப் செய்தால் மரண தண்டனை என்ற சட்டம் இயற்றினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்றும் தமிழக முதல்வர் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ரேப் செய்தவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை இயற்றி தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரியான ஒரு மாநிலமாக விளங்க வேண்டும் என்றும் இதனை அவர் கண்டிப்பாக உடனடியாக செய்யவேண்டும் என்று அவரை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்
மேலும் இந்த டுவிட்டை அவர் தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஆகிய இருவருக்கும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :