திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (13:47 IST)

உன் வேலையை மட்டும் பாரு? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா

உன் வேலையை மட்டும் பாரு? லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா
வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த ஒரு பரபரப்பான கருத்தும், அதற்கு வனிதா கூறிய பதிலடியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில், ‘வனிதா செய்தியை இப்போதுதான் பார்த்தேன். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன. விவாகரத்தும் ஆகவில்லை. படிப்பு மற்றும் அனுபவம் உள்ள ஒருவர் எப்படி இந்தத் தவறைச் செய்ய முடியும்? வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை? திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்பதும் புதிராக உள்ளது.
 
வனிதா பல கடினமான சூழல்களை எதிர்கொண்டுள்ளார். அவற்றை வெளிப்படையாகயும் பேசியுள்ளார். இந்த உறவாவது அவருக்கு நல்லவிதமாக அமையும் என நினைத்தேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது என்று தெரிவித்திருந்தார்
 
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த வனிதா தனது டுவிட்டரில், ‘உங்களுடைய ட்வீட்களை முதலில் நீக்குங்கள். உங்கள் உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள். நீங்கள் ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலோ அல்லது குடும்பத்தைக் கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை. நான் படித்தவர். சட்டம் எனக்கு தெரியும். யாருடைய ஆதரவின்றியும் என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய முடிவுகளுக்கு உங்களுடைய ஆதரவோ அங்கீகாரமோ ஆலோசனையோ எனக்கு தேவையில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து தள்ளி இருங்கள். இது பொதுப் பிரச்னையோ அல்லது உங்கள் டிவி நிகழ்ச்சியோ கிடையாது’ என்று கூறியுள்ளார்.
 
வனிதாவின் இந்த பதிலடிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் தனது டுவிட்டரில், ‘வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன். முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் பொதுவான கருத்தை தெரிவித்தேன். இதைவிட முக்கியமாக பாலியல் வன்முறை, சமீபத்திய தந்தை - மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் எனக்கு வருவதில்லை’ என்று கூறினார்.