ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 மே 2023 (07:51 IST)

சோலோ ஹீரோயினாக திரிஷா நடிக்கும் புதிய படம்… டைட்டில் இதுவா?

தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா. சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் அவர் தூங்கா நகரம் மற்றும் சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லராக உருவாகும் இந்த படத்துக்கு ‘கொலை வழக்கு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.