மீண்டும் இணையும் 'பேட்ட' நாயகிகள்!

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (18:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தில் த்ரிஷா, சிம்ரன் ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இருவரும் இணையும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று த்ரிஷா, சிம்ரன் இருவர் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் இருவரையும் இணைத்து ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும் த்ரிஷா, சிம்ரன் இருவரும் இணைந்து ஒரு கிரிமினல் குற்றத்தை கண்டுபிடிப்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.

'பேட்ட' படத்திற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக த்ரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்கள் கழித்து மீண்டும் த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தை சுமந்த் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :