ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (16:48 IST)

''அற்ப மாயை தான் புகழ்ச்சி என்றாலும் … வளர்ச்சிக்கு உதவுமே- '' பார்த்திபன்

parthiban
பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பார்த்திபனை ஒரு ரசிகர்கள் பாராட்டிய நிலையில் அவருக்குரீ டுவீட்  டுவீட் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 206 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ள நிலையில், உலகம் முழுவது  இந்த படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சின்ன பழுவேட்டையர் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நடிகர் பார்த்திபனின் நடிப்பை டிவிட்டரில் அற்ப மாயை என்ற ஐடிகாரர், பொன்னியின் செல்வன் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த நடிகர்

பெரிதாக வசனம் இல்லாமல் வஞ்சகத்தை அரை போதையில் கண்ணில் வைத்தே படம் முழுக்க நடித்த திரு @rparthiepan அவர்களே  என்று பாராட்டியிருந்தார்.

இதற்கு பார்த்திபன், அற்ப மாயை தான் புகழ்ச்சி என்றாலும் …
வளர்ச்சிக்கு உதவுமே-நன்றி என்று ரீ டுவிட் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 
Edited by Sinoj