திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (11:42 IST)

50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் திரையரங்குகள் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் மீண்டும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. ஆனால் தியேட்டர் கொள்ளளவில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மக்கள் எதிர்பார்க்கும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை என்பதுதான்.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் ஒரே நம்பிக்கையாக மாஸ்டர் படம் உள்ளது. அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸானால் மக்கள் பெரிய அளவில் தியேட்டருக்கு வருவார்கள் என நம்பிக்கை உள்ளது. அதனால் பொங்கல் வரை செலவைக் குறைக்க 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாஸ்டர் பட ரிலீஸின் போது திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகளை நிரப்பிக்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.