திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (08:01 IST)

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்!

raguram
பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்!
பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமான நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஒரு கிடாயின் கருணை மனு’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ராகவன் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
 
இசையமைப்பாளர் ராகவன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்நிலையில் 38 வயதே ஆன இசையமைப்பாளர் ராகவன் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva