வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு: அஜித்தை அரசியலுக்கு கூப்பிடும் பிரபல இயக்குனர்!

Last Modified ஞாயிறு, 17 மார்ச் 2019 (06:04 IST)
அரசியல் என்றாலே காததூரம் ஓடி ஒதுங்கி இருப்பவர் தல அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தபோது ஏற்பட்ட பிரச்சனைக்கே உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் அரசியலுக்காக தன்னுடைய பெயரை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் தெளிவாக விளக்கியிருந்தார்.
இருப்பினும் ஒருசிலர் பரபரப்பை ஏற்படுத்த அவ்வப்போது அரசியலுக்கு அஜித் வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் சுசீந்திரன், அந்த படத்தின் விளம்பரத்தை கருதி, அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறே. இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்' என்று சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை திரையுலகினர் சிலர் தங்களுடைய படம் வெளியாகும்போது தாங்கள் அஜித்தின் ரசிகர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சுசீந்திரன் வித்தியாசமாக அஜித்தை அரசியலுக்கு அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் அஜித் கொஞ்சமும் ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார் என்பதே அஜித் ரசிகர்களின் கருத்தாக உள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :