’’உருட்டுக் கட்டையால் தாக்கி... கத்தியால் வெட்டினார்….’’நாஞ்வில் விஜயன் மீது சூர்யா தேவி புகார்

Sinoj|

சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை சூர்யா தேவி தாக்கியதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது சம்மந்தமான சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் கருத்து சொல்லி சர்ச்சைகளைக் கிளப்பி வந்தனர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். அதில் சூர்யா தேவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது சம்மந்தமாக வனிதா தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. சூர்யாதேவிதான் அனைத்துக்கும் காரணமான குற்றவாளி. கஸ்தூரி சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயனை உள்ளே இழுத்து விட்டார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சூர்யா தேவி மறுத்திருந்தார்.

இந்நிலையில்
சமீபத்தில் ஒரு வீடியோவை விஜயன் வெளியிட்டார். அதில் சில ரவுடிகள் அவரைத் தாக்குவது போன்ற வீடியோக்கள் இடம்பெற்றன. இதையடுத்து அவர் சூர்யார் தேதி மீது வளசரவாக்கத்தில்
வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது புகார் தெரிவித்துள்ளார். அதில் நானும் எனது நண்பரும் விஜயன் வீட்டிற்குச் சென்றோம். அப்போது எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவிட்டு, இப்போது வனிதாவுடன் சமரசம் செய்தது குறித்துக் கேட்டேன். அதற்கு என்னைத் தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டைகளால் என்னை அடித்துவிட்டு, என் நண்பர் அப்புவையும் கத்தியால் வெட்டினார்ல் இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினோம்.


எனவே என்னையும் எனது நண்பரையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :