ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:07 IST)

யோகி பாபு நடிக்கும் ’கிணத்த காணோம்’… வடிவேலு டயலாக்கை டைட்டிலாக வைத்த இயக்குனர் சுரேஷ் சங்கையா!

2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை.

இதையடுத்து சமீபத்தில் அவர் இயக்கிய சத்தியசோதனை திரைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது அவர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ‘கிணத்த காணோம்’ என்ற படத்தை கமுதி பகுதிகளில் இயக்கி வருகிறார்.

கண்ணும் கண்ணும் என்ற படத்தில் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சி கிணத்த காணோம் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலான அந்த காட்சியின் வசனத்தில் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.