திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (09:14 IST)

‘பார்த்திபன் வித்தியாசமான மனிதர்’… இரவின் நிழல் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இரவின் நிழல் படக்குழுவினரை வாழ்த்தி படம் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். அதில் “இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான மனிதர். ரஹ்மான் கொஞ்சம் கூட கர்வமே இல்லாத இசையமைப்பாளர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.