தொடங்கியது பொன்னியின் செல்வன் – சௌந்தர்யா டிவீட் !

Last Modified சனி, 22 ஜூன் 2019 (13:26 IST)
பொன்னியின் செல்வன் வெப் சீரிஸூக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். அதே நேரத்தில் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸாகவும் எடுக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் பிரபல ஸ்டிரிமிங் தளமான எம்.எக்ஸ்.பிளேயர் நிறுவனமும் இணைந்து இதைத் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக சௌந்தர்யா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சீரிஸை இயக்க சூர்யா பிரதாப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :