சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு
siva| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (11:20 IST)
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயன் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என்றும் நேற்று செய்தி வெளியானது
இந்த நிலையில் சற்று முன் லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் ’டான்’ என்றும் இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் 19வது படத்தின் டைட்டில் ’டான்’ என்பது உறுதியாகி உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஏற்கனவே டாக்டர் மற்றும் அயலான் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :