ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (23:18 IST)

சுஷாந்த் சிங் மறைவு… சினிமா பிரபலங்களை திட்டிய சப்னா

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும் தோனியின் சுயசரிதைப் படத்தில் நாயகனாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்தியாவில் உள்ள அத்துனை சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் எம்.எஸ். தோனியின் ஹேஸ் டைலிஸ்டாக இருந்தவரும் சுசாந்த் சிங் ராஜ்க்கு  ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தவர் தான் சப்னா பாவ்னானி.

இவர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில காலமாக சுஷாந்த் சிங்கிற்கு பாலிவுட்டில் சினிமாவில் யாருமே உதவி செய்ய முன் வரவில்லை என்று பகிரங்கமாகவே தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் சுஷாந்த் சிங்கின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது.