த்ரிஷா இல்லனா...? ராணாவின் அடுத்த காதலி பிரபல நடிகையா?

papiksha| Last Updated: வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:26 IST)

டோலிவுட்டின் உச்ச நடிகரான ராணா பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். அந்த படத்திற்கு பிறகு இவரது சினிமா உலகத்தில் எங்கோ சென்றுவிடுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தனது உடல் எடையை மிகவும் ஒல்லியாக மாறி நெளிந்து போனார். அவரது உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரவினாலும் இதெல்லாம் படத்திற்காக என கூறி ஒரே வார்த்தையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர்  கடந்த சில வருடங்களுக்கு இவர் தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான த்ரிஷாவுடன் காதலில் கிசு கிசுக்கப்பட்டார். ஆனால், அந்த காதல் குறிப்பிட்ட நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. அதையடுத்து நடிகை தமன்னாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக டோலிவுட் , கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது. ஆனால், தமன்னாவும் நைசாக நழுவுட்டார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரகுல் ப்ரீத் சிங் ராணாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் கேட்டபோது, நான் ராணாவை காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மேலும் அவர் என்னுடைய பக்கத்துக்கு வீடுக்காரர்  என ஏதேதோ கூறி மழுப்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :