தமிழில் ராம் சரண் தேஜாவை அறிமுகப்படுத்தும் கௌதம்

Mahalakshmi| Last Modified புதன், 1 அக்டோபர் 2014 (14:12 IST)
அஜீத், சிம்பு படங்களை முடித்த பின் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவை தமிழில் தனது இயக்கத்தில் அறிமுகப்படுத்துகிறார் கௌதம்.
கௌதம் தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முடிவுறும் நிலையில் உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது படமாக்கி வருகின்றனர். இது முடிந்தால் இரு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டும்.

அஜீத் படம் முடிந்த பிறகு சிம்புவை வைத்து ஏற்கனவே தொடங்கியிருக்கும் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் கௌதம். டிசம்பரில் சிம்பு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.
இவ்விரு படங்களும் முடிந்த பின், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை கௌதம் இயக்குகிறார். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழில் ராம் சரண் தேஜாவின் அறிமுகப்படமாக இருக்கும்.

இந்தத் தகவலை ராம் சரண் தேஜா உறுதி செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :