திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (14:34 IST)

முதல் நாளில் ரூ.47 கோடி வசூலித்த புஷ்பா!

புஷ்பா வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 
தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில முன்னதாக வெளியாகி வைரலானது. 
 
இந்நிலையில் நேற்று இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறதாம். மேலும் புஷ்பா வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தெலங்கானாவில் மட்டுமே ரூ.11 கோடி ரூபாய்க்கு மேலும், தமிழகத்தில் ரூ. 4 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.