திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:32 IST)

பார்ப்பவர்களை பதறவைக்கும் மிரட்டலான சைக்கோ திரில்லர் ராட்சசன் ட்ரெய்லர்

ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால்  நடிப்பில்  உருவாகி வரும் படம் ராட்சசன், இந்த படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்  நேற்றுவெளியிட்டார்.  இந்த ட்ரெய்லரை பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் திகில் அனுபவத்தை தரும்.

இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட கோணத்தில் சைக்கோ திரில்லர் கொலையாளி தொடர்பாக திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள். இவர்தான்  சைக்கோ வில்லன் என்பதை ட்ரெய்லரில் காட்டாமல், விறுவிறுப்பாக ட்ரெய்லரில் கதையை சொல்கிறார்கள்.

சைகோக்கள் உளவியல் ரீதியாக எப்படி செயல்பாடுவார்கள் என்பதை யோசித்து, அதற்கு ஏற்ப திரைக்கதை உள்ளதாக தெரிகிறது.  போலீசாக நடித்துள்ள விஷ்ணு விஷால், சைக்கோ கொலைகாரனை எப்படி பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லவருகிறார்கள் இந்த ட்ரெய்லரில்.

இந்த ட்ரெய்லர் நிச்சயம் ரசிகர்களுக்கு திகில் அனுபவத்தை தரும்.