ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (07:41 IST)

அட்டகாசமான விஷ்வல்களோடு மீண்டும் ஒரு சர்வைவல் படம்… பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ட்ரைலர் ரிலீஸ்!

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்நாவலை இயக்குனர் பிளஸ்சி திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரதிவிராஜ்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகின. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் முடிந்தும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழிலும் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது.

அதை முன்னிட்டு இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. எல்லையற்ற பாலைவனத்தில் ஆடுகளை ஓட்டி செல்லும் பிருத்விராஜ் ஒரு மணற்புயல் வர, அதில் சிக்கிக்கொள்வது போன்ற விஷ்வல்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளன.