ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:53 IST)

ஸ்ட்ரீட் டான்ஸர் - 3டி யில் ஆட்டம் போடப் போகும் பிரபுதேவா !

ஏபிசிடி படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய 3டி படத்தில் வருண் தவானுடன் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனரான ரெமோ டிசோஸா பிரபுதேவாவை வைத்து இயக்கிய ஏபிசிடி படம் சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அதன இரண்டாம் பாகமும் உருவானது. இதில் முதன் முறையாக பாலிவுட் நடிகர் வருண் தவானும் பிரபுதேவாவும் இணைந்து நடித்தனர். இந்த வெற்றிப் படத்தையும் ரெமோவே இயக்கினார்.

இதனையடுத்து அதேப் படக்குழு இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறது. நடனம் தொடர்பான இந்தப்படத்தை 3D யில் எடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ஸ்ட்ரீட் டான்ஸர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் வருண் தவானும் அவருக்கும் ஜோடியாக சோனம் பஜ்வாவும் நடிக்க இருக்கின்றனர். இதில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்க இருக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடக்க இருக்கிறது.